search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பு வேலி - கோப்புப்படம்
    X
    தடுப்பு வேலி - கோப்புப்படம்

    குமரி மாவட்டத்தில் இன்று முதல் மேலும் 3 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

    குமரி மாவட்டத்தில் இன்று முதல் மேலும் 3 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதால் தடுப்பு வேலிகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை செய்யப்பட்டது. நாகர்கோவில் டென்னிசன் ரோடு, வெள்ளாடிச்சிவிளை, மணிகட்டிபொட்டல், தேங்காய்பட்டிணம், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவில் தளவாய்புரம், சந்தோஷ்நகர், தென் தாமரைகுளம் பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. நாகர்கோவில் தளவாய்புரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள்.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். பின்னர் வீடு வீடாகச் சென்று கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளித்த பொது மக்களுக்கு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

    தற்போது கொரோனா நோயில் இருந்து குணமாகி வீடு திரும்பியவர் வசித்து வரும் வீட்டைச் சுற்றியுள்ள 10 வீடுகளில் மட்டும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதே போல் சந்தோஷ் நகர் பகுதியிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள்.

    தென்தாமரைகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதையடுத்து அந்த பகுதியிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

    தென்தாமரைகுளத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக போலீஸ் நிலையம் சாமி தோப்பு பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் மாற்றப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் போலீஸ் நிலையத்தை மீண்டும் தென்தாமரை குளத்திற்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுவீடு திரும்பிய பெண்ணின் வீடு போலீஸ் நிலையத்தின் எதிர்புறம் உள்ளதால் போலீஸ் நிலையத்தை தென்தாமரை குளம் பகுதிக்கு கொண்டு செல்ல மேலும் சில நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×