search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக தேனீக்கள் தினத்தையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவி
    X
    உலக தேனீக்கள் தினத்தையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவி

    உடல் முழுவதும் தேனீக்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமி

    உலக தேனீக்கள் தினத்தையொட்டி உடல் முழுவதும் தேனீக்களுடன் சுமார் 15 நிமிடம் ஒரே இடத்தில் அமர்ந்து 8 வயது பள்ளி மாணவி ரீமாஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    பழனி:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான தொழில்கள் முடங்கின. தற்போது ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்திய பிறகு தொழில்கள் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் பழனி பகுதியில் தேனீ வளர்ப்பு தொழில் மீண்டும் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் உலக தேனீக்கள் தினத்தையொட்டி தேனீ வளர்ப்பு குறித்து திண்டுக்கல் மாவட்டம், பழனி புளியமரத்து செட் பகுதியை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவி ரீமாஸ் தனது உடல் முழுவதும் தேனீக்கள் வைத்து சுமார் 15 நிமிடம் ஒரே இடத்தில் அமர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    Next Story
    ×