search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசங்கள்
    X
    முகக்கவசங்கள்

    வெளிநாடுகளில் இருந்து முககவச ஆர்டர்களை பெற ஏற்றுமதியாளர்கள் மும்முரம்

    வெளிநாடுகளில் இருந்து முககவச ஆர்டர்களை பெற ஏற்றுமதியாளர்கள் மும்முரம் காட்டி வந்து கொண்டிருக்கிறார்கள்.
    திருப்பூர்:

    கொரோனா வைரசின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் முககவசம் மற்றும் முழுகவச ஆடைகளின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள வர்த்தகர்கள் திருப்பூர் தொழில்துறையினருக்கு முககவச ஆர்டர்கள் வழங்கினார்கள். ஆனால் முககவச ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், அந்த ஆர்டர்களை பெற முடியாமல் ஏற்றுமதியாளர்கள் தவித்தனர். தற்போது அதற்கான தடை நீங்கிய நிலையில், வெளிநாடுகளில் இருந்து முககவச ஆர்டர்களை பெற ஏற்றுமதியாளர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:-

    திருப்பூரில் முககவசம் தயாரிப்பை ஏராளமானவர்கள் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் முககவச வர்த்தகம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்றுமதிக்கு தற்போது அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வர்த்தக போட்டியும் நிலவ தொடங்கியுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து முககவச ஆர்டர்களை பெற ஏற்றுமதியாளர்கள் பலரும் மும்முரம் காட்டி வருகிறோம். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காட்டன், சில்க் மற்றும் உல்லன் துணிகளால், பல்வேறு புதுமையான வடிவங்களில் முககவசங்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய தயாராகியுள்ளோம். ஆர்டர்களும் அதிகளவும் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


    Next Story
    ×