search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுத்தை
    X
    சிறுத்தை

    ஆத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டமா? மாயமாகும் நாய்கள்

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர் தேக்க பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் நாய்கள் காணாமல் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    ஆத்தூர்:

    ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கப்பகுதி போதிய பராமரிப்பற்ற நிலையில் இருப்பதால் புதர் செடிகள் அடர்ந்துள்ளன. மான், காட்டுப்பன்றி, மயில் போன்றவைகளின் நடமாட்டம் எப்போதும் இருக்கும் இவைகள் வாழை, சோளம் சாகுபடிகளை சேதப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் தோட்டத்தில் வளர்க்கும் நாய்கள் மாலை நேரத்தில் காணாமல் போய்விடுகிறது. மாலை நேரத்தில் உறுமும் சத்தம் கேட்டவுடன் நாய்கள் அந்தப் பகுதியை நோக்கி ஓடும்போது காணாமல் போய் விடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    குதிரைக்குளிப்பாட்டி, களத்துப்பட்டி சாலை, அத்தி மரத்துப்பட்டி போன்ற இடங்களில் சிறுத்தைகள் பதுங்கி இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது அப்படி சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை இருந்தாலும் நடமாட்டம் இருக்கிறதா என்று கண்காணிக்கின்றோம் என்றனர்.

    Next Story
    ×