search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ குழுக்கள் (கோப்புப்படம்
    X
    மருத்துவ குழுக்கள் (கோப்புப்படம்

    கொரோனாவில் இருந்து மற்ற நோயாளிகளை பாதுகாக்க 11 சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைப்பு

    கொரோனா தொற்றில் இருந்து, சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளை செய்து தர இந்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
    சென்னை:

    கொரோனா தொற்றில் இருந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்களை பாதுகாப்பது குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ குழுக்களின் பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

    அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவ சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன மருத்துவர்களை கொண்டு 11 வகையான சிறப்பு மருத்துவ குழுக்களை அரசு உருவாக்கி உள்ளது.

    இந்த சிறப்பு குழுக்களில்

    1. டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கான குழு.

    2. நீரழிவு நோயாளிகளுக்கான குழு.

    3. ரத்த கொதிப்பு நோயாளிக்களுக்கான குழு.

    4. புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கான குழு.

    5. கர்ப்பிணி தாய்மார்களுக்கான குழு.

    6. குழந்தைகள் மற்றும் ரத்த உறைதல் நோயாளிகளுக்கான குழு.

    7. இருதய நோயாளிகளுக்கான குழு.

    8. மூத்த குடிமக்களுக்கான குழு.

    9. காசநோய், ஆஸ்துமா, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு.

    10. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு.

    11. மனநலம் காப்பதற்கான குழு இடம் பெற்றுள்ளது.

    தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றில் இருந்து, சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளை செய்து தர இந்த குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இந்த மருத்துவ குழுக்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாகவும், மின்னணு செயலி மூலமாகவும் கலந்தாலோசித்தார்.

    இக்கூட்டத்தில் ஒவ்வொரு சிறப்பு பிரிவினருக்கும் எந்தெந்த மாதிரியான மருத்துவ வசதி செய்து தர வேண்டுமெனவும், வீட்டில் இருக்கும்போது பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்தும், பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் குறித்தும், நோய் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிந்து அதற்குண்டான ஆலோசனைகளை எவ்வாறு பெற வேண்டும் என்பதும் குறித்தும், அரசின் டெலிகன்சல்டே‌ஷன் மற்றும் ஆரோக்ய சேது செயலிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து எவ்வாறு இச்சேவைகளை அவர்களுக்கு கொண்டு செல்வது என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

    இந்த ஆலோசனை முடிவுகள், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சமர்பிக்கப்பட்டது. இக்குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், சிறப்பு கவனம் தேவைப்படும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களின் உடல் நிலையை சீராக வைத்துக்கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×