search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹோம்மேட் சாக்லேட் - கோப்புப்படம்
    X
    ஹோம்மேட் சாக்லேட் - கோப்புப்படம்

    கொடைக்கானலில் ஊரடங்கால் சாக்லேட் விற்பனை பாதிப்பு

    கொடைக்கானலில் பொதுமுடக்கம் காரணமாக சாக்லேட் கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் சாக்லேட் விற்பனை பாதிப்படைந்துள்ளது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பொதுமுடக்கம் காரணமாக சாக்லேட் கடைகள் பூட்டி பூட்டப்பட்டுள்ளதால் 10,000 கிலோவிற்கும் மேலாக உள்ள ஹோம்மேட் சாக்லேட்ஸ் குப்பையில் கொட்டும் நிலை, உருவாகி உள்தால் நிவாரணம் வழங்கிட தமிழக அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஊரடங்குக்கு முன் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தும் ஹோம் மேட்சாக்லேட்களை வாங்கி செல்லுவது வழக்கம் மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரி சாலையை சுற்றிலும் சுமார் 1000-த்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஹோம்மேட் சாக்லேட்டுகள் விற்பனை செய்துவருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 60 நாட்கள் கடந்துள்ள நிலையில் ஹோம்மேட் சாக்லேட் கடைவியாபாரிகள் கடைகளை திறந்து சாக்லேட்களை பார்க்கும் போது மேற்பகுதியில் பாசம் பிடித்தும், துர்நாற்றம் வீசும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹோம்மேட் சாக்லேட்டுகளை குப்பையில் கொட்டும் அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொத்த வியாபாரிகளுக்கும் குறைந்தது ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஹோம்மேட் சாக்லேட் கடை வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 7,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனை தமிழக அரசு கவனம் செலுத்தி ஹோம்மேட் சாக்லேட் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மீண்டும் தொழிலை தொடங்கும் விதமாக நிவாரண தொகை வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஹோம்மேட் சாக்லேட் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×