search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்த பீகார் தொழிலாளர்கள் 1600 பேர் சொந்த ஊருக்கு பயணம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்த பீகார் மாநில தொழிலாளர்கள் 1600 பேர் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    ஒடிசா, ஜார்கண்ட், உத்திரபிரதேசம், பீகார், அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலை இழந்த அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    ஒடிசா மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 200 பேர் ரெயில்மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மதியம் 2 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரெயிலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 1600 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பழனி வட்டத்தில் 706, ஒட்டன்சத்திரம் 36, வேடசந்தூர் 215, ஆத்தூர் 17, நிலக்கோட்டை 105, திண்டுக்கல் கிழக்கு 28, திண்டுக்கல் மேற்கு 134, கொடைக்கானல் 15, குஜிலியம்பாறை 30 மற்றும் தேனி மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 263 பேர் என மொத்தம் 1600 பேர் பீகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஒவ்வொருவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.995 டிக்கெட் எடுத்து வழங்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ரெயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டதும் சானிடைசர் கொண்டு கை கழுவ வைத்து சமூக இடைவெளியில் அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டது.

    தமிழக எல்லை வரை அவர்களுக்கு தேவையான உணவு திண்டுக்கல் மாவட்டம் சார்பிலும் அதன்பிறகு மத்திய அரசு சார்பிலும் உணவு வழங்கப்படும். இவர்கள் அனைவரும் வருகிற 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு பீகார் மாநிலம் ஹாஜீபூர் ரெயில் நிலையத்தை சென்றடைவார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 44 பேர், டெல்லியை சேர்ந்த 3 பேர், தெலுங்கானாவை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 49 பேர் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மாணவர் விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 3 பேர் இந்த முகாமிற்கு கொண்டு வரப்பட்டதால் 52 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உணவுகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×