search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொடைக்கானலில் ஒரு ஏக்கரில் பயிரிட்ட கஞ்சாசெடி தீயிட்டு அழிப்பு- 2 பேர் கைது

    கொடைக்கானலில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன் கெங்குவார்பட்டி சோதனை சாவடியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது உசிலம்பட்டியை சேர்ந்த இருவர் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் கொடைக்கானல் தூண் பாறை சுற்றுலா தலத்திற்கு பின்பு தனது கூட்டாளிகள் கஞ்சா பயிரிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த தகவல் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து சோதனை செய்ததில் வனத்துறைக்கு உட்பட்ட ஓடையை ஒட்டியுள்ள நிலத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் 100க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிடபட்டிருந்தது தெரியவந்தது.

    கஞ்சா செடியை பயிரிட்ட கொடைக்கானல் கூம்பூர் பகுதியை சேர்ந்த சசிக்குமார் ,வில்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி ஆகிய இருவரை கைது செய்து பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளை கொடைக்கானல் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து தீயிட்டு ஆழித்தனர்.

    மேலும் சசிக்குமார், பாண்டி, இருவரையும் சிறையில் அடைத்து இவர்களது கூட்டாளிகளான வீரமணி, பிரசாந்த் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் அதிகளவில் நடக்கிறது.

    இதுபோன்ற சம்பவங்களால் சமூகவிரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. எனவே கஞ்சா பயிரிடுவோர், விற்பனைசெய்வோர் ஆகியோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×