search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    கண்ணமங்கலம் அருகே அரசு அலுவலர் வீட்டில் 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

    கண்ணமங்கலம் அருகே அரசு அலுவலர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்திலிருந்து ஆரணி செல்லும் ரோட்டில் உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன் (வயது 48). இவர் நடுக்குப்பத்தில் மேற்கு ஆரணி வட்டார வள மைய மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள அவரது நிலத்திலேயே புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் தினேஷ் (17), சந்தோஷ் ஆகியோர் கே.வி.குப்பத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். அவர்களை அழைப்பதற்காக கோவர்த்தனன் மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு கே.வி.குப்பம் சென்றார்.

    பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள் முன்பக்க கிரில் கதவு, மரக்கதவு ஆகியவற்றை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் அதிலிருந்த மலேசிய கைக்கெடிகாரங்களை திருடிக்கொண்டு தப்பிவிட்டனர்.

    இந்த நிலையில் ஊருக்கு திரும்பிய கோவர்த்தனன் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகைகள், பணம், மலேசிய கைக்கெடிகாரம் திருப்பட்டிருருந்ததை பார்த்த அவர் அது குறித்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் மூலம் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×