search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா முகாம்  - கோப்புப்படம்
    X
    கொரோனா முகாம் - கோப்புப்படம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா முகாமில் 6,519 பேர் கண்காணிப்பு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா முகாமில் 6,519 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் தான் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சொற்ப எண்ணிக்கையில் நோய் தொற்று இருந்த நிலையில், ஏப்ரல் 29-ந் தேதி முதல் நேற்று வரை பிற மாவட்டம், பிற மாநிலத்தில் இருந்து 6,519 பேர் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர்.

    இதில் சென்னையில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 96 பேர் வந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் அந்தந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகள், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னரே ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    திருவண்ணாமலையில் 786, கீழ்பென்னாத்தூரில் 606, செங்கம் 789, தண்டராம்பட்டு 368, ஆரணி 452, போளூர் 731, கலசபாக்கம் 500, ஜமுனாமரத்தூர் 950, செய்யாறு 356, வந்தவாசி 654, சேத்துப்பட்டு 320, வெம்பாக்கம் 96 என மொத்தம் 6 ஆயிரத்து 519 பேர் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு தினசரி உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 323 பேர் வந்துள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டிருந்த நிலையில், கீழ்பென்னாத்தூர் தாலுகா கீழ்நாச்சிப்பட்டில் 3, ஆக்கூர் அடுத்த தெளப்பையில் ஒருவர் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது. இதில் 41 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×