search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    போளூரில் 141 பேர் சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

    போளூரில் கொரோனா பரிசோதனை முடிந்த நிலையில் 141 பேர் தங்களது சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    போளூர்:

    வெளி மாநிலங்களில் இருந்து பலர் தினமும் போளூர் பகுதிக்கு வருபவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். சுகாதாரத் துறையினர் அவர்களை பரிசோதனை செய்து வருகின்றனர். நேற்று தொற்று இல்லை எனப் பரிசோதனை முடிவுகள் வந்த 139 பேரை ஜமுனாமரத்தூர் பகுதி கிராமங்களுக்கும், 2 பேரை கல்பட்டு கிராமத்துக்கும் தாசில்தார் ஜெயவேல் பஸ்களில் அனுப்பி வைத்தார்.

    போளூருக்கு நேற்று வெளிமாநிலங்களில் இருந்து வந்த 12 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

    போளூரை அடுத்த வெண்மணியில் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவன் டவுசிப்இப்ராஹீம் (வயது 21), ஜார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த தீபக்யாதவ் (22) ஆகியோர் சொந்த ஊருக்கு செல்ல இ.பாஸ் கேட்டு விண்ணப்பித்தனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் டவுசிப் இப்ராஹீம் சென்னைக்கு சென்று ரெயிலிலும், தீபக்யாதவ் காட்பாடிக்கு சென்று ரெயிலிலும் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×