search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    தனியார் மயத்தை கண்டித்து திருச்சியில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    தனியார் மயத்தை கண்டித்து திருச்சி தென்னூரில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருச்சி:

    பாண்டிச்சேரி உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மாநில மின் வாரியங்களை பிரிக்கக் கூடாது, மின் வினியோகத்தை தனியார் மயமாக்கக்கூடாது,

    2020 மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொ.மு.ச. மாநில துணைத்தலைவர் மலை யாண்டி, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ராஜமாணிக்கம், தொழிலாளர் சம்மேளனம் சிவசெல்வன், கணேசன், என்ஜினீயர் சங்கம் மற்றும் பொறியாளர் கழக திருச்சி மாவட்ட செயலாளர் விக்ரமன் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகரியம் கோட்ட செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×