search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோஷ்டி மோதல்
    X
    கோஷ்டி மோதல்

    திருவெண்ணைநல்லூர் அருகே கோஷ்டி மோதல்- போலீஸ் படை குவிப்பு

    திருவெண்ணைநல்லூர் அருகே 2 கிராமங்களிலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவருக்கு மலட்டாற்று பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.

    அந்த நிலத்தில் சிவக்குமார் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் நிலத்தில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்திகுப்பம் பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாலுடன் வந்தனர்.

    இதை பார்த்த சிவக்குமார் அவர்களை எனக்கு சொந்தமான நிலத்தில் நீங்கள் நுங்கு வெட்டக்கூடாது என தடுத்து நிறுத்தினார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிவாக்குமாரை தாக்கினர்.

    இந்த தகவலை அறிந்த 2 கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக காந்திகுப்பத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 கிராமங்களிலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    Next Story
    ×