search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி
    X
    அரிசி

    ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்

    கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
    தென்திருப்பேரை:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர். குரும்பூர் அருகே புறையூர், ராஜபதி, குருகாட்டூர், குரங்கணி உள்ளிட்ட இடங்களில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவீன்குமார் சுமார் 250 ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

    ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், தி.மு.க. நகர செயலாளர் பாலம் ராஜன், வக்கீல் பாக்கியராஜ், குரங்கணி பஞ்சாயத்து தலைவர் ஜெயமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கனிமொழி எம்.பி., அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் சார்பில், காயல்பட்டினத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் 170 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை தி.மு.க. நகர செயலாளர் முத்து முகம்மது வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×