search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழையால் லட்சுமணேசுவரர் கோவிலை மழை நீர் சூழ்ந்து நின்ற காட்சி.
    X
    பலத்த மழையால் லட்சுமணேசுவரர் கோவிலை மழை நீர் சூழ்ந்து நின்ற காட்சி.

    ராமேசுவரத்தில் பலத்த மழை- கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

    பலத்த மழையால் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் அம்மன் சன்னதி வாசல் வழியாக செல்லும் முன்மண்டபத்தினுள் மழை நீர் தேங்கி நின்றது.
    ராமேசுவரம்:

    தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ராமேசுவரம் பகுதியிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று காலை 6.30 மணி அளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல பலத்த மழையாக பெய்தது. பின்னர் இடி-மின்னலும் ஏற்பட்டது. இந்த மழை 1½ மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

    பலத்த மழையால் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் அம்மன் சன்னதி வாசல் வழியாக செல்லும் முன்மண்டபத்தினுள் மழை நீர் தேங்கி நின்றது. தூய்மை பணியாளர்கள் மூலம் மழைநீர் வேகமாக வெளியேற்றப்பட்டது. ராமநாதசாமி கோவிலின் உப கோவிலான லட்சுமணேசுவரர் கோவில், நாகநாதர் கோவிலையும் மழை நீர் சூழ்ந்து நின்றது.

    கோவில் மற்றும் பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான ராமதீர்த்தம் பகுதியில் மழை நீர் சூழ்ந்து நின்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு மணிமண்டபம் முன்பும் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×