search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறந்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் பதில்

    ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறந்தது ஏன்? என்பது குறித்து ஹலோ எப்.எம். நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    ஹலோ எப்.எம்.-ல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தொகுப்பாளர் ராஜசேகருடன் உரையாடுகிறார். அப்போது அவர் பேசுகையில், ‘பிற மாநிலங்களில் 10 லட்சம் பேருக்கு 700 முதல் 800 பேர் வரை மட்டுமே கொரோனா தொற்றை பரிசோதிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு நாம் 5 ஆயிரம் பேர் வரை பரிசோதிக்கிறோம். அதனால் நமது ‘சிஸ்டம்’ ஒழுங்காக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவர்களும், அரசு மருத்துவர்களும் தன்னலம் இல்லாமல் தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். தேவைப்படும்போது தனியார் மருத்துவர்களையும் கொரோனா பணியில் சேர்த்துக்கொள்வோம்.

    அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த நோயை கட்டுப்படுத்த முடியும், மக்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காக எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் இருந்தாலும் மக்கள் இவை அனைத்தையும் தாண்டி வெளியே வருகிறார்கள். எனவே தான் தொற்று அதிகமானது என்று தெரிவித்தார்.

    ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறந்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு பின்னால் பல்வேறு சமூக காரணங்கள் உள்ளன. மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகும்’ என்று தெரிவித்தார்.

    மேலும் காவிரி மேலாண்மை வாரியம் தற்போது ஏன் ஜலசக்தி துறையின் கீழ் கொண்டு செல்லப்படுகிறது?, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய பணத்தை வாங்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவில்லையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். 
    Next Story
    ×