search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்தபோது எடுத்த படம்.
    X
    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்தபோது எடுத்த படம்.

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான சுற்றுச்சுவர் பணி மீண்டும் தொடங்கியது

    ஊரடங்கினால் முடக்கம் அடைந்த மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி 40 நாட்களுக்கு பிறகு தொடங்கியது.
    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைய உள்ளது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் மத்திய சாலை திட்டத்தின் கீழ் ரூ.21.10 கோடியில் ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரையிலான 12 அடி அகலம் கொண்ட கிராம சாலையை 60 அடி அகலத்திற்கு நான்கு வழிச்சாலையாக உருவாக்கும் பணி தொடங்கியது. 12 இடங்களில் தரைப்பாலம் அமைத்தல் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் யாவும் 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 9 மாதங்களை கடந்த போதிலும் பணி முடிந்தபாடில்லை.

    இதே போல் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. 12 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட சிலாப்புகள் மற்றும் கான்கிரீட் தூண்கள் அமைத்து அதை தரையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் டிலான் தளத்தில் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

    இந்த பணியையும் 6 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. சுமார் 70 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 40 நாட்களாக பணி நடக்கவில்லை. இதனர்ல அங்க வேலை செய்து வந்த பீகார், உத்தரகாண்ட் பகுதியை சேர்ந்த தொழிலாளிகள் வேலையின்றி முடங்கினர். மேலும் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் ஊரடங்கில் சில பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து 40 நாட்களுக்கு பிறகு நேற்று சுற்றுச்சுவர் அமைப்பதற்கான சிலாப்புகள், தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது. அதில் வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் மிகுந்த ஆர்வத்துடன் வேலை பார்த்தனர்.

    இதே போல நேற்று ஆஸ்டின்பட்டி ஆஸ்பத்திரி வளாகத்தில் சாலை அகலப்படுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    Next Story
    ×