search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    கிருமிநாசினி தெளிக்கும் பணி- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

    சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
    ராஜபாளையம்:

    அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொகுதியான சிவகாசி மற்றும் திருத்தங்கல் ஆகிய 2 நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிநவீன எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதனை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

    ராஜபாளையம் நகரில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு ஆற்றிய ராஜபாளையம் தர்மாபுரம் தெரு ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும் சமூக சேவகருமான ராமராஜ் தலைமையிலான மன்ற குழுவினர்கள் சிவகாசி மற்றும் திருத்தங்கல் ஆகிய பகுதிகளில் அதிநவீன எந்திரம் மூலம் 5வாகனங்களில் சென்று கிருமி நாசினி மருந்துகளை தெளித்தனர்.

    நேற்றைய தினம் 80 ஆயிரம் லிட்டர் தண்ணீரில் கிருமி நாசினி மருந்துகள் கலந்து வீதிவீதியாக தெளிக்கப்பட்டன. திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலர்களும் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களும், நகராட்சி அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    மேலும் அமைச்சர் ஆலோசனைப்படி ராஜபாளையம் வட்டம் சமுசிகாபுரம் கிராமத்தில் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராம்ராஜ் மற்றும் அ.தி.மு.க. அவைத்தலைவர் பரமசிவம் ஆகியோர் 50 திருநங்கைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்கள்.

    Next Story
    ×