search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம்
    X
    சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம்

    5 மண்டலங்களில் 100ஐ கடந்தது கொரோனா பாதிப்பு- சென்னை அப்டேட்ஸ்

    சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் இதுவரை 2526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிக அளவாக 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் மொத்தம் 1082 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது.

    மண்டலவாரியாக பார்க்கையில்,  5 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. திரு.வி.க நகரில் 259 பேரும்,  ராயபுரத்தில் 216 பேரும், தேனாம்பேட்டையில் 132 பேரும், கோடம்பாக்கத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 101 பேரும், அண்ணாநகரில் 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    கொரோனா பாதிப்பு நிலவரம்

    வளசரவாக்கத்தில் 60 பேரும், அம்பத்தூரில் 33 பேரும், அடையாறில் 21 பேரும்,  திருவொற்றியூரில் 19 பேரும்,  ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 4 பேரும்,  சோழிங்கநல்லூரில் 3 பேரும், மணலியில் 3 நபரும் உள்ளனர்.

    நேற்று அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 48 நபரும், தண்டையார்பேட்டையில் 24 நபரும், வளசரவாக்கத்தில் 20 நபரும், கோடம்பாக்கத்தில் 19 நபரும், ராயபுரத்தில் 17 பேரும், அண்ணாநகரில் 6 பேரும், அமபத்தூரில் 6 நபரும், திருவொற்றியூரில் 3 நபரும், மணலி, அடையாறில் தலா ஒருவரும் பாதித்து உள்ளனர்.

    சென்னையில் தண்டையார்பேட்டை, திரு.வி.க.., நகர், வளசரவாக்கத்தில் தலா ஒருவர் என மூன்று பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    சென்னையில் ஆண்கள் 63.01% பேரும், பெண்கள் 36.99% பேரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
    Next Story
    ×