என் மலர்

  செய்திகள்

  ஜெயந்தி விழா
  X
  ஜெயந்தி விழா

  ராணிப்பேட்டையில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராமானுஜரின் 1004ம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது.
  ராணிப்பேட்டை:

  ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராமானுஜரின் 1004ம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது.
  ஸ்ரீ ராமானுஜரின் 1004ம் ஆண்டு ஜெயந்தி விழா முன்னிட்டு அறக்கட்டளை வளாகத்தில் திருப்பல்லாண்டு திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை ஸ்ரீ ஆண்டாள் வாழித்திருநாமம் வாரணம் ஆயிரம் சேவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. 

  உலக அமைதிக்காகவும் நாட்டுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழவும் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் போலீசார், தூய்மைப்பணியாளர்கள் சுகாதாரத்துறையினர் ஆகியோர்களும் அவர்களின் குடும்பத்தாரும் ஆரோக்கியத்துடன் வாழ பாராயணமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 

  இந்நிகழ்ச்சியில் ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை பொருளாளர் மோகன் சக்திவேல், ஸ்ரீ உடையவர் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளர் இளஞ்செழியன், ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை வாழ்நாள் உறுப்பினர் பேபி வெங்கடேசன், பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×