என் மலர்
செய்திகள்

முட்டை
நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை இன்று 20 காசுகள் உயர்ந்து 3.20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட 5 மாநகராட்சிகள் முழு ஊரடங்கு அறிவிப்பால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனையடுத்து முட்டை விலை ரூ.3-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நிறைவடைந்ததையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டை ஏற்றிய வாகனங்கள் இந்த பகுதிகளுக்கு சென்றன. இதனால் முட்டை விலை இன்று 20 காசுகள் உயர்ந்து 3.20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Next Story