என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ் பரிசோதனை
  X
  கொரோனா வைரஸ் பரிசோதனை

  கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அதிகாரிகள் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
  கோவை:

  கோவை மாவட்டத்தில் இதுவரை 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யடுத்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப் பாளையம், சிறுமுகை, மதுக்கரை, குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, உக்கடம் உள்பட 18 பகுதிகள் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த கட்டுப்பாடு மண்டல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சுரங்கத்துறை இயக்குனர் சரவண வேல்ராஜ், சிட்கோ நிர்வாக இயக்குனர் கஜலட்சுமி ஆகிய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலா குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

  இந்த அதிகாரிகள் தலைமையிலான குழு பார்வையிடுவதற்காக இன்று கோவைக்கு வர உள்ளனர்.

  இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியதாவது: கோவை மாவட்டம் உள்பட முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  கோவையில் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு மண்டல பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் இன்று கோவைக்கு வருகை தர உள்ளனர்.மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக எந்த ஒரு பாதிப்பும் புதிதாக உருவாகவில்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதேபோல திருப்பூர் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனர் நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்து அங்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
  Next Story
  ×