என் மலர்

  செய்திகள்

  குழந்தை
  X
  குழந்தை

  கொரோனா பாதித்த பெண்ணின் குழந்தைக்கு பாதிப்பு இல்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் கொரோனா பாதித்த பெண்ணின் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
  மதுரை:

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்ப நாயக்கனூர் அருகிலுள்ள டி. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் கணவர், மகனுடன் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

  அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி பிரசவம் நடக்கும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அவருக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. எனவே அவரை உறவினர்கள் தொட்டப்ப நாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

  அங்கு அவரின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதித்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

  இதனை தொடர்ந்து அந்த குழந்தையின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது குழந்தைக்கு நோய் தொற்று இல்லை என்று தெரியவந்தது.

  இருந்த போதிலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு பிறகு அந்த குழந்தைக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதிலும் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

  Next Story
  ×