என் மலர்

  செய்திகள்

  மணல் கொள்ளை
  X
  மணல் கொள்ளை

  கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை- இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  நெ.1.டோல்கேட்:

  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருச்சி நெ.1டோல்கேட் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆறு, அய்யன் வாய்க்கால், பங்குனி ஆறு உள்ளிட்ட இடங்களில் மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகள் மூலம் சில முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

  இந்நிலையில் நெ.1டோல் கேட் அருகே பளுர் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தாளக்குடி சத்யம் நகரில் வசிக்கும் அவரது நண்பரின் வீட்டு கட்டுமான பணிக்காக தனக்கு சொந்தமான இரண்டு மாட்டு வண்டிகள் மூலம் கொள்ளிடம் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.

  இதுகுறித்து தகவலறிந்த தாளக்குடி பகுதியை சேர்ந்த மற்ற மாட்டு வண்டி வைத்திருப்பவர்கள் உள்ளூரில் நாங்கள் மணல் அள்ளி விற்பனை செய்யும்போது நீங்கள் இங்கு வந்து மணல் அள்ளக்கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

  இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. ஊரடங்கு அமலில் உள்ள நாளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்வது தொடர்பாக நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×