search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    திருப்பனந்தாளில் சாலையில் உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்ட போலீஸ்காரரர்- டீ விற்பனையாளர்

    கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளில் வாக்குவாதம் ஏற்பட்டத்தில் போலீஸ்காரர் மற்றும் டீ விற்பனையாளர் உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்பவர் தீபக். இவர் கடந்த 17-ந்தேதி திருப்பனந்தாள் பகுதிகளில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருந்த நந்தவர்மன் என்பவரிடம் டீ விற்கக்கூடாது என கூறியுள்ளார்.

    இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்து தாக்கி கொண்டனர். அப்போது உருட்டுக்கட்டையால் நந்தவர்மனை, போலீஸ்காரர் தீபக் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த கட்டையை பிடுங்கி கந்தவர்மனும் தீபக்கை தாக்கியுள்ளார்.

    தகவலறிந்து அங்கு வந்த திருப்பனந்தாள் போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இருவரும் தாக்கிக் கொண்ட வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.

    காவல் துறையினருக்கென்ற சட்ட வட்டத்தைக் கடந்து நடந்து கொண்டால் பொதுமக்கள் அதற்கு எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சியாகியுள்ளது.

    பொதுமக்களும் காவல் துறையின் சீருடைக்கு மதிப்பளித்து அவர்களைத் தாக்கக் கூடாது என்பதையும் இந்த சம்பவம் சுட்டிக் காட்டுகிறது.
    Next Story
    ×