என் மலர்

  செய்திகள்

  தூய்மை பணியாளர்களுக்கு சிரிப்பு வைத்தியம் பயிற்சி அளிக்கப்பட்டது.
  X
  தூய்மை பணியாளர்களுக்கு சிரிப்பு வைத்தியம் பயிற்சி அளிக்கப்பட்டது.

  விருதுநகர் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிரிப்பு வைத்தியம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு விசித்திரமாக “சிரிப்பு வைத்தியம் “மற்றும் யோகா உள்ளிட்ட நரம்பியல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

  விருதுநகர்:

  தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தென் மாவட்டங்களான மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணியில் சுகாதார பணியாளர்களுடன் தூய்மைப் பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

  மதுரைக்கு அடுத்த மாவட்டமான விருதுநகரில் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விருதுநகர் நகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

  மேலும் குப்பைகள் தேங்காமல் தொற்றுநோய் பரவாமலும் தடுக்க தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். ஊழியர்களின் பணிச்சுமை, மன அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விசித் திரமாக “சிரிப்பு வைத்தியம் “மற்றும் யோகா உள்ளிட்ட நரம்பியல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

  விருதுநகரில் சுமார் 180 ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்,அவர்கள் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து பணியாற்றுகிறார்கள், இதனால் அவர்களது மன அழுத்தத்தை போக்குவதற்காக இந்த சிரிப்பு வைத்தியம் தொடங்கப்பட்டுள்ளதாக நகரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  விருதுநகரில் உள்ள விருதை விழுதுகள் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சின்ன ராஜா என்பவர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சிரிப்பு வைத்தியம் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்று வருகிறது, இதற்கான முழு ஒத்துழைப்பையும் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்.

  ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த விசித்திரமான பயிற்சி பணியாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 40 பேர் வீதம் இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த சிரிப்பு வைத்தியத்தால் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம் முழுமையாக நீங்குவதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் அவர்கள் கூறும் போது நாங்கள் தினமும் அதிகாலை முதல் இரவு வரை ஓய்வின்றி பணியாற்றி வருகிறோம், குப்பை அள்ளுவது,கிருமிநாசினி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்யும்போது எங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

  இந்த பயிற்சி எங்களுக்கு முழுமையான திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது, பணிச்சுமையை மறந்து மன அழுத்தம் இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற இந்த சிரிப்பு பயிற்சி எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

  விருதுநகர் நகராட்சியின் இத்தகைய நடவடிக்கை தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது.

  Next Story
  ×