என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  திருப்பனந்தாள் அருகே முன்னாள் மாவட்ட காங்கிரஸ் செயலாளர்- அவரது மனைவி மீது தாக்குதல்: 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பனந்தாள் அருகே வீட்டை காலி செய்ய மறுத்த முன்னாள் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்திய 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்த்னர்.

  கும்பகோணம்:

  திருப்பனந்தாள் அருகே சோழபுரம் மானம்பாடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர். இந்த நிலையில் சோழபுரம் பாரிஸ் நகரில் கடந்த 15 மாதங்களாக ராஜசேகரன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து தருமாறு ராஜசேகரன் கேட்டுள்ளார்.

  அப்போது ரவிச்சந்திரன் தற்போது ஊரடங்கு நிலவி வருகிறது. இதனால் தற்போது காலி செய்ய முடியாது. மேலும் வாடகை ஒப்பந்தம் வருகிற செப்டம்பர் வரை உள்ள என்று கூறியுள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர் குடிதண்ணீர் மற்றும் அத்தியவாசிய தேவைகளை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

  இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தனர். இதையடுத்து ராஜசேகரின் மனைவி கீதா, அவரது தங்கை சாந்தி, டிரைவர் சக்தி ஆகிய மூவரும் முன் விரோதத்தால் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலையை தாக்கியதில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கீதா, சாந்தி, டிரைவர் சக்தி ஆகியோரை திருப்பனந்தாள் போலீசார் கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×