என் மலர்

  செய்திகள்

  தமிழக காவல்துறை
  X
  தமிழக காவல்துறை

  ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தமிழக காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிட மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

  அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.

  இந்நிலையில் ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என காவல்துறை அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து  பணியாற்றிட மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர்கள் தேவை.

  40 முதல் 50 வயது வரை விருப்பம் உள்ளோர் அவரவர் வசிக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அலுவலகங்களிலும், மாநகரங்களில் உள்ளோர் மாநகர ஆணையாளர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 
  Next Story
  ×