என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ் பரிசோதனை
  X
  கொரோனா வைரஸ் பரிசோதனை

  கொரோனா பாதிப்பு - மருத்துவ பரிசோதனையை விரைவுபடுத்த கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகளை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
  விருதுநகர்:

  மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சையில் இருந்த 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். நேற்று 3 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். எனினும் இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இம்மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

  நேற்று முன்தினம் விருதுநகரை சுற்றி உள்ள பகுதிகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அவர்கள் 7 பேரையும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததுடன் அவர்கள் இருந்த பகுதியை தனிமைப்படுத்தி அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் 249 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு ரத்த மாதிரிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான முடிவுகள் நேற்று தெரிவிக்கப்பட்டன. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. நேற்று 338 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் தெரிய ஓரிரு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கருவி மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த கருவியில் ஒரே நேரத்தில் 144 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. பாதிப்பு ஏதும் இல்லை என்றால் 4 மணி நேரத்திலும், பாதிப்பு ஏதும் இருந்தால் 8 மணி நேரத்திலும் முடிவுகள் தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்படும் ரத்தமாதிரிகளின் முடிவுகளை அறிய காலதாமதம் ஏற்படுவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.

  விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கருவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உதிரி பாகங்கள் மும்பையில் இருந்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டதால் கடந்த வாரம் தான் இந்த நவீன கருவியின் மூலம் பரீட்சாத்தமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு முறைக்கு 32 ரத்தமாதிரிகளே பரிசோதனை செய்யப்பட்டது. ஆனாலும் இந்த நவீன கருவியின் செயல்பாட்டினை இந்திய மருத்துவ கழகம் ஆய்வு செய்து அங்கீகாரம் அளித்த பின்னர் தான் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இந்த கருவி மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது. தற்போது உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவ பரிசோதனை முக்கிய பங்கு வகிப்பதால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி செயல்படுவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவது ஏன் என தெரியவில்லை. இது பற்றி மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டால் இம்மாவட்டத்தில் அதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்டறிய வாய்ப்பு ஏற்படுவதுடன் சாதாரணமாகவே குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை நடத்தி சமூக பரவல் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

  எனவே தமிழக அரசின் சுகாதாரத்துறை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஏற்படும் தாமதத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கழகத்திடம் இதற்கான அங்கீகாரம் பெறுவதை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
  Next Story
  ×