என் மலர்

  செய்திகள்

  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிதியுதவி வழங்கியக்காட்சி
  X
  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிதியுதவி வழங்கியக்காட்சி

  அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்
  கரூர்:

  கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு பணிகளுக்கு தன்னார்வலர்கள் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். அதன் அடிப்படையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் வருகிற 3-ந்தேதி வரை ஏழை, எளிய பொதுமக்களுக்கு இலவசமாக 3 நேரமும் உணவு வழங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முழு செலவு தொகையையும் ஏற்றுக்கொண்டார்.

  தொடர்ந்து அதற்கான முதல்கட்ட நிதி ரூ.1 லட்சத்தை, மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையிலும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா முன்னிலையிலும் நேற்று கரூர் உழவர் சந்தை அருகே உள்ள அம்மா உணவகத்தில் கரூர் நகராட்சி ஆணையர் சுதாவிடம் வழங்கினார். தொடர்ந்து சமைப்பதற்கான சமையல் பொருட்களின் தரத்தினையும், சமையல் கூடத்தையும், சுகாதாரமாக சமைப்பதையும் பார்வையிட்ட அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ. கீதா ஆகியோருடன் சாப்பிட்டு, அதன் தரத்தினை ஆய்வு செய்தார். கரூர் நகராட்சியில் 2 அம்மா உணவகங்களில் நாள்தோறும் சுமார் 3,000 பேரும், குளித்தலையில் உள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் சுமார் 2,600 பேரும் உணவு அருந்தி பயன்பெறுவது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×