என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
தடை உத்தரவை மீறி செயல்பட்ட 20 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு
தடை உத்தரவை மீறி செயல்படுவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தது உட்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில் 20 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி அனுமந்தபுரம், பந்தாரஅள்ளி, பூனாத்தன அள்ளி ஆகிய பகுதிகளில் தடை உத்தரவை மீறி வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் சமூக இடைவெளி கடை பிடிக்காமல் இருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தடை உத்தரவை மீறி செயல்படுவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தது உட்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில் 20 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
Next Story