என் மலர்

  செய்திகள்

  சிறை
  X
  சிறை

  தாய்லாந்து நாட்டினர் 6 பேர் புழல் சிறையில் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பரப்பியதாக கைதான தாய்லாந்து நாட்டினர் 6 பேர் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  சென்னை:

  தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் சுற்றுலா விசாவில் வந்து ஈரோடு பகுதியில் மத பிரசாரம் செய்தனர். அதில் ஒருவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக இறந்தார். மற்ற 6 பேரில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர்.

  இவர்கள் 6 பேரும் பூரண குணம் அடைந்தனர். இவர்கள் நோய் தொற்று பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இன்று அடைக்கப்பட்டனர்.

  Next Story
  ×