என் மலர்

  செய்திகள்

  கொரோனா தடுப்பு நடவடிக்கை
  X
  கொரோனா தடுப்பு நடவடிக்கை

  திண்டுக்கல் மாவட்டத்தில் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
  தாடிக்கொம்பு:

  திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருந்தக ஆய்வாளர்கள், மருந்து விற்பனையாளர் சங்கத்தினர், மருத்துவ சங்கத்தினர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கினார்.

  திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து பொருட்கள் வழங்க கூடாது. மருந்து கடைகளில் மருத்துவர்கள் மட்டும் பயன்படுத்தும் சர்ஜிக்கல் ஸ்பிரிட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. பொது மக்கள் கண்டிப்பாக மருந்து கடைகளுக்கு முகக்கவசம் அணிந்து வரும்படி அறிவுறுத்தவேண்டும்.

  மருந்துக்கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்கவைத்து மருந்து பொருட்களை வழங்க வேண்டும். மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கொடுத்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு மருதுகடைக்காகர்களே பொறுப்பாவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறினார்.

  மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

  Next Story
  ×