என் மலர்
செய்திகள்

மூணாறு நகர் பகுதியில் உலா வரும் காட்டு யானைகள்
மூணாறு:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதி தீவிர கொரோனா கண்காணிப்பு பகுதியாக உள்ளது என்பதால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு போலீஸ் கெடுபிடி உள்ளது. இந்நிலையில் மூணாறு நகர் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பகல் நேரத்தில் உலா வரும் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு தங்கும் விடுதி கட்டிட பகுதியில் பல மணி நேரம் உலா வந்த காட்டு யானை அங்குள்ள வாழை, காய்கறிகளை சேதப்படுத்தியது. காட்டு யானையை பார்த்த பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கினர். இரவு 9 மணிக்கு பிறகே காட்டு யானை அப்பகுதியை விட்டு விலகி சென்றது.
மூணாறு பகுதியில் காட்டெருமை தொல்லையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய தோட்டங்களை நாசம் செய்து வருகின்றன.