என் மலர்

  செய்திகள்

  மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது
  X
  மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது

  செஞ்சியில் பலத்த மழை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் நாசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செஞ்சியில் நேற்று பலத்த மழை பெய்ததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது.
  செஞ்சி:

  செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. அங்கு நெல் மூட்டைகளை வியாபாரிகள் போட்டி போட்டு கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் ஆங்காங்கே வைத்திருந்தனர்.

  இந்த நிலையில் செஞ்சியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. மரக்காணம் பகுதியிலும் மழை பெய்தது. இதில் மரக்காணம் அருகே சிறுவாடியில் அமைக்கப்பட்டிந்த தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிந்த 50-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.

  Next Story
  ×