என் மலர்

  செய்திகள்

  கரும்பு
  X
  கரும்பு

  திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கரும்பு, தென்னை விவசாயிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான சிறு வியாபாரிகள் இளநீர் மற்றும் கரும்புச்சாறு விற்பனை செய்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் வாங்கிய இளநீர் மற்றும் கரும்புகளை விற்பனை செய்து லாபம் ஈட்ட முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை இயற்கை சார்ந்த மாவட்டமாகும். இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பல 1000 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு இருந்தனர்.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் செய்யாறு பகுதியில் 18,000 கரும்பு விவசாயிகளும், போளூர் பகுதியில் 20,000 கரும்பு விவசாயிகளும், கீழ்பென்னாத்தூர் 5000 கரும்பு விவசாயிகளும், தண்டராம்பட்டு அடுத்த பண்ணாரி பகுதியில் 10,000 விவசாயிகளும் உள்ளனர்.

  வெட்டப்பட்ட கரும்புகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த 20 நாட்களில் சுமார் 4 லட்சம் டன் கரும்பு சேதம் ஆகிவிட்டது. கலசப்பாக்கம் பகுதியில் 2 ஆயிரம் விவசாயிகள் வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு உற்பத்தியாகும் வெல்லத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  போளூர் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவை தொகை ரூ.5 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஜனவரி 15-ந்தேதிக்கு பின்னர் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.

  கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் கரும்பு விவசாயத்துக்காக கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதை தடுக்க வேண்டும்.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு, ஆரணி, போளூர், கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் 2 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இவைகளிலிருந்து இளநீர் பறிக்கப்பட்டு கோடைகாலத்தில் விற்பனை செய்யப்படும். கடந்த 20 நாட்களாக இளநீர் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  இதனால் ஏற்கனவே வெட்டப்பட்ட இளநீர் விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஒரு தென்னை மரத்திற்கு ரூ.3 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

  இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு மற்றும் தென்னை விவசாயிகள் தங்களின் வாழ் வாதாரத்தை இழந்துள்ளனர். இணை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தலைவர் புருஷோத்தமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான சிறு வியாபாரிகள் இளநீர் மற்றும் கரும்புச்சாறு விற்பனை செய்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் வாங்கிய இளநீர் மற்றும் கரும்புகளை விற்பனை செய்து லாபம் ஈட்ட முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

  தொடர்ந்து விற்பனை செய்ய முடியாததால் சில இளநீர் விற்பனையாளர்கள் சைக்கிளில் கொண்டு சென்று அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

  இதன் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  Next Story
  ×