என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  கரூர் மாவட்டத்தில் தடையை மீறியதாக 4,898 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் மாவட்டத்தில் தடையை மீறியதாக இதுவரை மொத்தம் 4,558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,898 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  கரூர்:

  கரூர் மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தேவையற்ற காரணங்களுக்காக யாரும் வெளியில் வருகின்றனரா? வெறிச்சோடிய வீதிகளில் யாரும் செல்பி எடுக்கின்றனரா? என்பன உள்ளிட்டவை குறித்து கண்காணித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 48 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4,558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 4,898 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,442 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

  Next Story
  ×