search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சென்னையில் கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 66 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது.

    7,707 மாதிரிகளை பரிசோதனை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் வசதி உள்ளது. சென்னையை சுற்றி அதிக மக்கள்தொகை உள்ளதால் பாதிப்பும் உயர்ந்துள்ளது.

    சென்னையில் கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 41 ஆக அதிகரித்துள்ளது. சென்னை, கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 முது நிலை மருத்துவ மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தில், தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், மதுரையில் 4 பேர், விருதுநகர், பெரம்பலூர் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×