என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  புளியங்குடியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புளியங்குடியில் மேலும் 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
  புளியங்குடி:

  தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை புளியங்குடியை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களில் ஒருவர் மட்டும் வெளிமாவட்டத்தில் சிகிச்சை பெறுகிறார். மற்ற அனைவருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

  அங்கு சிகிச்சை பெற்ற, புளியங்குடியில் 2-வதாக கொரோனா பாதிக்கப்பட்ட நபரான 72 வயது முதியவர் பூரண குணமடைந்ததால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் புளியங்குடியை சேர்ந்த 4 பெண்கள், ஒரு ஆண் என மேலும் 5பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் 75 வயது மூதாட்டி ஆவார். 

  இதையடுத்து புளியங்குடியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.
  Next Story
  ×