search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உணவு பொட்டலம்
    X
    உணவு பொட்டலம்

    ராஜபாளையத்தில் ஆதரவற்றோர்களுக்கு இருவேளை உணவு விநியோகம்

    ராஜபாளையத்தில் தையல் பணி, தினக்கூலி தொழிலுக்காக வந்தவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான உணவு பொருட்களை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் நகர் அம்பலபுளி பஜார் பகுதியில் பீகாரைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் நைட்டி தொழில், தையல் பணி, தினக்கூலி தொழிலுக்காக வந்தவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான உணவு பொருட்களும், அத்தியாவசிய செலவிற்கு பணமும், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கவுதம் தலைமையில் மன்ற தலைவர் ராமராஜ் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    வட்ட அவசர நிகழ்வு மேலாண்மை தலைவர் செல்வகுமார் நேரில் வருகை தந்து மன்றத்தின் சார்பில் உணவு எவ்வாறு தயாராகிறது? எவ்வாறு பேக்கிங் செய்யப்படுகிறது? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிட வேண்டி நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையிலும் அவர் பங்கேற்றார்.

    நேற்று அன்னதானம் 3 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. 32-வது நாளாக மருத்துவமனை செவிலியர்கள், சாலையோர ஆதரவற்றவர்களுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், தொழு நோய் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும், காவல் துறை காவலர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும், நகராட்சி தூய்மை பணியாளர் களுக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும், காய்கறி சந்தை சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும், இருவேளை உணவு வழங்கப்பட்டது.

    இதேபோன்று பஸ் நிலையங்கள், ரெயில் நிலையத்தில் உள்ள ‌ஆதரவற்றவர்களுக்கு, சாலையில் செல்லும் வழிப் போக்கர்களுக்கும், ஏ.டி.எம். வாட்ச் மென்களுக்கும், மலையடிப்பட்டி பகுதி, அண்ணா நகர் பகுதிகளிலும் மதியமும், இரவும் உணவு விநியோக சேவைகள் நடைபெற்றன.

    காவல் துறையினரிடம் அனுமதி பெற்று கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதியமும் இரவும் உணவு விநியோகம் செய்யப்பட்டன.

    பல ஊர்களில் இருந்து வெகுதூரப் பயணமாக அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கும் இரவு நேர உணவுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×