என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  மேலூரில் கொரோனா தாக்கம் தீவிரம்: இன்று முதல் முழு ஊரடங்கு அமல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மாவட்டம் மேலூரில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
  மேலூர்:

  மதுரை மாவட்டம் மேலூரில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என டி.எஸ்.பி. சுபாஷ் கூறினார்.

  மேலூர் தாலுகாவில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டோர் வசித்து வரும் முகமதியாபுரம், குபேரன் நகர் உள்ளிட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கு காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இன்று முதல் (25-ந் தேதி) மேலூரிலுள்ள மருந்து மற்றும் பால் கடைகளைத் தவிர அனைத்து கடைகளையும் திறக்கக்கூடாது என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இதேபோல் நகருக்குள் வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் போடப்பட்டு இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக அனுமதிக்கப்படவில்லை.

  பொதுமக்கள் நலன் கருதி காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆதரவு தரவேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை டி.எஸ்.பி. சுபாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×