என் மலர்

  செய்திகள்

  கொரோனா தொற்று பரிசோதனை
  X
  கொரோனா தொற்று பரிசோதனை

  மதுரை - விருதுநகரில் நர்ஸ், மருத்துவ பணியாளருக்கு கொரோனா தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வார்டில் பணியாற்றிய நர்சு மற்றும் மருத்துவ பணியாளருக்கு கொரோனா தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  மதுரை:

  மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 4 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

  இவர்களில் ஒருவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றும் நர்சு ஆவார். கொரோனா தொற்று உறுதியானதும் அவர் மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சு வசிக்கும் பகுதி சீல் வைக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. தடுப்பு கட்டைகள் அமைத்து அந்த பகுதிக்கு யாரும் செல்லாமல் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

  விருதுநகர் மாவட்டம் குன்னூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளராக வேலை பார்த்து வரும் 35 வயது பெண் ராஜபாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சென்றிருந்தார்.

  எனவே அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. எனவே உடனடியாக அவரை மதுரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  குன்னூர் கிராமம் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளரின் குடும்பத்தினருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட உள்ளது.
  Next Story
  ×