search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    கிருஷ்ணகிரியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கிருஷ்ணகிரியில் இன்று முதல் மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள் காலவரையின்றி மூடல்

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கிருஷ்ணகிரியில் இன்று முதல் மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய கூடிய கடைகள் மட்டும், குறித்த நேரத்தில் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி நகரில் மளிகை கடைகள் காலையில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று பல்வேறு கடைகளுக்கு அதிகாரிகளும், போலீசாரும் நெருக்கடி கொடுத்தனர். அதனால் அனைத்து மளிகை கடைகளும் மூடுவதற்கு முடிவு செய்து இன்று (25-ந் தேதி) முதல் காலவரையின்றி திறக்கப்படாது என்று தெரி வித்தனர்.

    இதே போல கிருஷ்ணகிரி நகரில் உள்ள பல்பொருள் அங்காடிகள் காலையில் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வந்தன.

    நேற்று முன்தினம் காலையில் சமூக இடை வெளியை கடைபிடிக்கவில்லை என்று கூறி, போலீசார் பல்பொருள் அங்காடி ஒன்றை பூட்டி சாவியை எடுத்து சென்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி நகரில் நேற்று முதல் பல்பொருள் அங்காடிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். அதனால் அந்த கடைகளும் இன்று மூடப்பட்டு இருந்தது. இதனால் இன்றுகாலை கிருஷ்ணகி நகரில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×