என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 9963 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடியதாக மொத்தம் 9 ஆயிரத்து 598 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 ஆயிரத்து 963 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  திருவாரூர்:

  தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

  திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நேற்று வரையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடியதாக மொத்தம் 9 ஆயிரத்து 598 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 ஆயிரத்து 963 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இவர்கள் பயன்படுத்திய 9150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இனி வரும் நாட்களில் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  Next Story
  ×