என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  100 பெண்களை மிரட்டி பணம் பறித்த என்ஜினீயர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில் அருகே 100 பெண்களை மிரட்டி பணம் பறித்த என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நாகர்கோவில்:

  குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தின் இ-மெயிலுக்கு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அவரது வக்கீல் மூலம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:-

  நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி என்ற சுஜி (வயது 26) என்பவர் சமூக வலைதளத்தில் தனது ஆபாச படங்களை பதிவேற்றியுள்ளார். என்னை மிரட்டி லட்சக்கணக்கில் பணமும் பறித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். விசாரணையில் காசி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

  காசி, என்ஜினீயரிங் படித்துள்ளார். காசியின் தந்தை கணேசபுரத்தில் கோழிக்கடை நடத்தி வருகிறார். படிப்பு முடிந்த பின்பு காசி, தந்தையின் கடையில் அவருக்கு உதவியாக இருந்துள்ளார். வியாபாரம் முடிந்த பின்பு சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

  பெண்ணியம் குறித்தும், பெண்களின் நலன் பற்றியும் பல கருத்துக்களை பதிவிடுவார். உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடலுடன் அவர் காட்சி அளிக்கும் படங்களுடன் இந்த பதிவுகள் இருக்கும்.

  காசியின் கருத்துக்களுக்கு ஏராளமான பெண்கள் லைக் செய்து கருத்து பதிவிடுவார்கள். இவ்வாறு பதிவிடும் பெண்களிடம் காசி சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொள்வார். பின்னர் செல்போனில் பேசுவார். அவர்களை வீடியோ காலில் பேச அழைப்பார். அப்போது அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து அனுப்ப கூறுவார். இதற்கு ஒப்புக்கொள்ளும் பெண்களை தனியாக சந்தித்து பேசுவார். அவ்வாறு பேசும்போது அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல படம் எடுத்து கொள்வார்.

  ஆபாச படங்கள் எடுத்த பின்பு அந்த பெண்ணிடம் பணம் கேட்பார். கொடுக்க மறுக்கும் பெண்களிடம், அவர்களின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டுவார். அவமானத்திற்கு பயந்து அவர் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு பெண்கள் மவுனமாக இருந்து விடுவார்கள்.

  இப்படித்தான் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரும் காசியின் வலையில் வீழ்ந்தார். அவருடன் நெருக்கமாக பழகிய காசி, பெண் டாக்டரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து கொண்டனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை காசி படம் எடுத்து கொண்டார்.

  அதன்பின்பு தான் காசி, தனது சுயரூபத்தை டாக்டரிடம் காட்ட தொடங்கினார். அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் வரை பணம் பறித்த காசி அதன்பின்பும் பணம் கேட்டு மிரட்டினார்.

  உஷாரான பெண் டாக்டர், காசியின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினார். ஒரு முறை இருவரும் நேரில் சந்தித்து கொண்டபோது காசியின் செல்போனை பெண் டாக்டர் எடுத்து பார்த்தார். அப்போது காசி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தது. அவர் 100-க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோல ஏமாற்றி இருப்பதை அறிந்து பெண் டாக்டர் அதிர்ந்து போனார்.

  இந்தநிலையில் போலீசார் நேற்று காசியை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் பல ஹர்ட்டிஸ்குகளையும் போலீசார் கைப்பற்றினர்.

  அதில் காசி விலை உயர்ந்த வாகனங்களில் சென்றபடி பேசும் காட்சிகள், பெண்களை மிரட்டும் வீடியோக்கள் பதிவாகி இருந்தது. பெங்களூருவை சேர்ந்த பெண் உள்பட பல பெண்களுடன் காசி நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் அதில் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×