search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடை
    X
    ரேசன் கடை

    ரேசன் கடைக்கு ஒருவர் மட்டுமே வர வேண்டும்- அரசு உத்தரவு

    ஒரு ரேஷன் அட்டைக்கு ஒருவர் மட்டுமே கடைக்கு வர வேண்டும் என்ற விபரங்களை போலீசார் மூலம் ஒலிபெருக்கியை வைத்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மே மாதத்துக்கான ரேசன் பொருட்கள் நாளொன்றுக்கு 200 அட்டைகளுக்கு வழங்கப்படவுள்ளது. பொருள் வழங்கும் நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு மே 2 மற்றும் 3-ந் தேதிகளில் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்கப்பட வேண்டும். டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரம் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும். மற்ற நேரத்தில் பொருள் வழங்கப்படாது. ஒரு ரேசன் அட்டைக்கு ஒருவர் மட்டுமே கடைக்கு வர வேண்டும் என்ற விபரங்களை போலீசார் மூலம் ஒலிபெருக்கியை வைத்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    ஊரடங்கு இருப்பதால் 15 மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகளில் ரேசன் கடைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரையில் இயங்கும். மற்ற இடங்களில் இயல்புப்படி இயங்கும். ரேஷன் கடைகளுக்கு பொருள் வாங்க வரும்போது ஒரு மீட்டர் இடைவெளியில் மக்களை நிறுத்த வேண்டும். தனிமைப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். அப்போது கையுறை, முகக்கவசம் அணிந்து ஊழியர்கள் செல்ல வேண்டும்.

    ரேஷன் கடைகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி பொருட்களை அளிக்க வேண்டும். மே 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகளுக்கு வாராந்திர விடுமுறை என்றாலும், அன்று ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். அதற்குப் பதிலாக மே 22-ந் தேதி விடுமுறை அளிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×