என் மலர்

  செய்திகள்

  வழக்குகள் பதிவு
  X
  வழக்குகள் பதிவு

  குமரியில் ஊரடங்கு மீறல்- கடந்த 30 நாட்களில் 5,653 வழக்குகள் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரியில் ஊரடங்கு மீறல் தொடர்பாக கடந்த 30 நாட்களில் 5 ஆயிரத்து 653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  நாகர்கோவில்:

  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

  வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  மொத்தத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து நேற்று வரை 30 நாட்களில் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் 4 ஆயிரத்து 490 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×