என் மலர்

  செய்திகள்

  தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்
  X
  தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்

  கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது: கலெக்டர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கூறியுள்ளார்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 9 பேர், திருவையாறு பகுதியைச் சேர்ந்த 3 பேர், திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 5 பேர், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 11 பேர், அம்மாபேட்டையைச் சேர்ந்த 4 பேர், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த 3பேர் உட்பட 54 பேருக்கு இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உறுதி செய்யப்பட்ட 54 பேரில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 நபர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 54 பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

  அதில் 4 பேர் ஏற்கனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று கும்பகோணத்தை சேர்ந்த ஒரு நபரும், தஞ்சாவூர் நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும், ஒரத்தநாடு ஊரணிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்பு குழு காவல்துறை தலைவர் சாரங்கன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் குணம் அடைந்தவர்களுக்கு பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழினையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

  மேலும் குணமடைந்து வீடு செல்லும் 3 பேரும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 54 பேரின் குடும்ப உறுப்பினர்கள் 128 பேருக்கு ஸ்வாப் பரிசோதனைக்காக பரிசோதனை மையத்திற்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டு, இதுவரை பரிசோதனை முடிந்த 108 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லையெனவும், 20 பேருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த 526 பேரில் இதுவரை பரிசோதனை முடிந்த 422 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லையெனவும், 104 பேருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

  காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவ மனையிலும், செங்கிப் பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 1842 பேருக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 1610 பேருக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 232 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

  Next Story
  ×