என் மலர்

  செய்திகள்

  ப.சிதம்பரம்
  X
  ப.சிதம்பரம்

  குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?- ப.சிதம்பரம் கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடியேறிய மக்கள் வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  முன்னாள் நிதி மந்திரியும் பாராளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

  தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?

  வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

  நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×