என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  தமிழகத்தில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
  சென்னை:

  கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியே பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

  கர்நாடகா முதல் தென் தமிழகம் வரை உள்ள வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் 28-ந்தேதி வரை (5 நாட்களுக்கு) சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

  24, 25 மற்றும் 26-ந்தேதிகளில் ஆங்காங்கே ஓரிரு இடங்களிலும், 27, 28-ந்தேதி சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். 27, 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, காற்றுடன் கனமழைக்கான வாய்ப்பும் உள்ளது. மழை பெய்யாத பகுதிகளில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் இருக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×